மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன: பலி 71 ஆக உயர்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன: பலி 71 ஆக உயர்வு
Updated on
1 min read

மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளான இ லங்கைக்கு இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள் குவிந்து வருகின்றன.

இந்தியா சார்பில் நேற்று முன் தினம் ராணுவ விமானம் மூலம் அவசர தேவைக்கான நிவாரணப் பொருட்களுடன் மீட்புக் குழுவினர் கொழும்பு நகருக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு கடற்படை கப்பல் களும் அனுப்பப்பட்டுள்ளன.

படகுகள், வெள்ள மீட்பு உப கரணங்கள், ஜெனரேட்டர்கள், படுக்கை விரிப்புகள், எமர்ஜென்சி லைட்டுகள், மருந்து பொருட்கள் இந்தியா சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல் ஜப்பான் நாட்டில் இருந்தும் நேற்று விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் கொழும்பு வந்து சேர்ந்தன. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா சார்பில் நிதியுத விகள் இலங்கை அரசுக்கு வழங்கப் பட்டுள்ளன.

இதற்கிடையே, சனிக்கிழமை கொழும்பு நகரின் சில பகுதிகளில் மழை வெள்ளம் சற்று குறைந் திருந்தது. மற்ற இடங்களில் மழை நீடித்ததால், 24 மணி இடை வெளிக்குப் பின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை பாதிப்பு காரணமாக, இலங்கையில் நேற்று விசாக திருவிழாவை (புத்த பூர்ணிமா) மக்கள் கொண்டாடவில்லை. ‘ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து, உடுத்திய உடையுடன் தவித்து வரும் நிலையில், விசாக திருவிழாவை கொண்டாடும் பணத்தை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக வழங்க வேண்டும்’ என, புத்த துறவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இலங்கையின் 25 மாவட்டங்களில், 22 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகர் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளது. 3 லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, 500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மழை வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி நேற்று வரை 71 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நிலச்சரிவுகள் ஏற்பட்ட நாளில் இருந்து, 127 பேர் காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பல்வேறு இடங்களில் 50 அடி உயரத்துக்கு இடிபாடுகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. அதில், சிக்கியி ருப்பவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in