இணையத்தில் வைரலாகிய இம்மானுவேலை தெரியுமா?
"இம்மானுவேல்... இம்மானுவேல்..."
இணையத்தில் கடந்த இரு தினங்களாக நெருப்புக் கோழி ஒன்றின் வீடியோ வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் தெற்கு ஃபுளோரிடாவில் உள்ளது நக்கில் பம்ப் பண்ணை. இப்பண்ணையில் பணிபுரியும் டைய்லர் ப்ளேக் என்ற பெண் தனது டிக்டாக் பக்கத்தில் அப்பண்ணை குறித்தும், அப்பண்ணையில் உள்ள விலங்குகளின் தகவல்கள் குறித்தும் நகைச்சுவையான தொனியில் வீடியோ பகிர்ந்து வருகிறார். தனது வீடியோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்து வருகிறார்.
அவர் பதிவு செய்யும் வீடியோக்களில் நெருப்புக் கோழி ஒன்று, அவரை இடையூறு செய்கிறது. அந்த நெருப்புக் கோழியின் பெயரை இம்மானுவேல் என்று அவர் அறிமுகப்படுத்துகிறார். ப்ளாக் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோக்களிலும் இம்மானுவேல் தொந்தரவு செய்கிறது. ப்ளாக்கின் போனை தட்டி விடுகிறது. இந்தக் காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றது. தட்டி விட்ட போனை உற்று பார்க்கிறது இம்மானுவேல்.
ப்ளாக்குக்கும் - இம்மானுவேலுக்கும் இடையேயான உறவு முறை நெட்டிசன்கள் பலரை கவர்திருக்கிறது. இம்மானுவேல் ப்ளாக்கிடம் சண்டை மட்டும் செய்வதில்லை, பல நேரங்களில் அன்பையும் பொழிக்கிறது. இவை அத்தனையும் பளாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இம்மானுவேல் தவிர்த்து அந்த பண்ணையில் மாடு, ஆடு, முயல் போன்ற ஏராளமான பண்ணை விலங்குகளும் உள்ளன. அவையும் ப்ளாக்கின் வீடியோ பதிவை அவ்வப்போது தொந்தரவு செய்கின்றன. எனினும் இமு என்கிற இமானுவேல்தான் தற்போது சோஷியல் மீடியா ஸ்டாராகி உள்ளது.
