இந்தச் சண்டையை நிறுத்துங்கள்!

இந்தச் சண்டையை நிறுத்துங்கள்!
Updated on
1 min read

தென்னாப்பிரிக்க தேசிய வழக்காடு ஆணையத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவருவோருக்கு மொலிசி நசானா, பாதிக்கப்பட்ட அப்பாவி அல்ல என்பது புரியும். குற்றச் செயல்களுக்கு எதிராகப் போரிட வேண்டிய ‘தேசிய வழக்காடு ஆணையம்' (என்.பி.ஏ.) அரசியல்வாதிகளின் சுயநலம் காரணமாக பலவீனப்படுத்தப்பட்டு, ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டது.

தபோ மெபிக்கி காலத்தில்தான் இந்தக் குறுக்கீடு என்ற புற்றுநோய் பரவத் தொடங்கியது. குற்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டிய புலேலனி நகுகா தன்னுடைய அரசு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்தும் ஜேகப் சுமாவை ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டார். ஜேகப் சுமாவையும் போலீஸ் கமிஷனர் ஜாக்கி செலிபியையும் காப்பாற்ற, தனக்குப் பிறகு அதிபராகப் பதவியேற்ற வுசி பிகோலியையே ஓரம்கட்டினார்.

சுமா அதிபரானபோது, அரசு வழக்குகளுக்கான தேசிய இயக்குநர் பதவியைப் பெற அதிகாரிகளிடையே கடும் போட்டி நடந்தது. இந்தப் பின்னணியில்தான் மொலிசி நசானா விவகாரத்தை நாம் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமான இந்தப் பதவிக்கு உரியவர்களை வெளிப்படையாகத் தேர்வு செய்ய வேண்டும். நாடாளுமன்றக் குழு நேர்காணல் மூலம் உரியவரை அடையாளம் காண வேண்டும். பிறகே அதிபர் அவரை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இந்த யோசனைகளை மிதித்துவிட்டு, தன்னுடைய பெரும்பான்மை வலுவைக் கொண்டு இப்பதவியை நிரப்ப முற்பட்டால், சொந்த நோக்கத்துக்காக இந்தப் பதவியைப் பயன்படுத்த அது முற்படுகிறது என்றே கருதப்படும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in