அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மரணம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மரணம்
Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மேரி ட்ரம்ப் காலமானார். அவருக்கு வயது 73.

முன்னாள் அமெரிக்க அதிபரும், தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மேரி ட்ரம்ப். இந்த இணைக்கு இவான்கா ட்ரம்ப், ஜுனியர் ட்ரம்ப், எரிக் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவி இவானா ட்ரம்ப் இறந்துவிட்டதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, ”நியூயார்க் சிட்டியில் உள்ள தனது இல்லத்தில் இவானா காலமானார். அவர் ஓர் அற்புதமான, அழகான பெண். அனைவருக்கு ஊக்கமளிக்கும் வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்.

அவருடைய பெருமையும் மகிழ்ச்சியும் அவருடைய மூன்று குழந்தைகளான டொனால்ட் ஜூனியர், இவாங்கா மற்றும் எரிக்தான். நாங்கள் அனைவரும் அவரைப் பற்றி பெருமைப்பட்டதை போல இவானா தனது பிள்ளைகள் பற்றி மிகவும் பெருமைப்பட்டார். இவானாவின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மாடலான இவானா, சிறந்த தொழிதிபராக இருந்தார். அவரது நிறுவனத்தைச் சார்ந்த ஆடைகள், நகைகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலம். சில புத்தகங்களையும் இவானா எழுதியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in