

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான தேசிய புவியி யல் போட்டியில், முதல் 3 இடங்க ளைப் பிடித்து இந்திய வம்சாவளி மாணவர்கள் சாதனை படைத்துள் ளனர். இதில் ரிஷி நாயர் (12) முதலிடத்தைப் பிடித்தார்.
28-வது வருடாந்திர தேசிய புவியியல் போட்டிக்கான முதல் சுற்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாநில அளவில் ஏற்கெனவே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 54 மாணவர்கள் கலந்து கொண்டனர் .
இதில் 7 இந்தியர்கள் உட்பட 10 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
வாஷிங்டனில் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் புளோரிடா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ரிஷி நாயர் முதலிடம் பிடித்தார்.
நாயருக்கு ரூ.33.6 லட்சம் மதிப்பிலான கல்லூரி கல்வி உதவித் தொகையும் தேசிய புவியியல் சங்கத்தில் ஆயுள் உறுப் பினர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது. இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இதுபோல மசாசூசட்ஸ் மாகா ணத்தில் வசிக்கும் 8-ம் வகுப்பு மாணவர் சாகேத் ஜொன்னலகட்டா (14) 2-ம் இடத்தைப் பிடித்தார். இவருக்கு ரூ.16.7 லட்சம் மதிப் பிலான கல்லூரி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. அலபமா மாகாணத்தைச் சேர்ந்த கபில் நாதனுக்கு (12) 3-ம் பரிசாக ரூ.6.7 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இறுதிச் சுற்றில் பங்கேற்ற மற்ற 7 பேருக்கும் தலா ரூ.34 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.