

ஆப்கானிஸ்தானில் நீதிமன்ற ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் இறந்தனர்.
தலைநகர் காபூலில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று காலை மினி பஸ் ஒன்றில் பணிக்கு வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் காபூல் நகரின் மேற்குப் பகுதியில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் மினி பஸ் மீது மோதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் இறந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப் பேற்றுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் காபூல் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டார்.