

தீவிரவாதம், பயங்கரவாத வன் முறையை எதிர்த்துப் போரிடு வது, புலனாய்வுத் தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, எல்லைப் பாதுகாப்பில் பெரிய அளவில் ஒத்துழைப்பு உள்ளிட்ட தீவிரவாதத்துக்கு எதிரான செயல் திட்டத்துக்கு ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளி்த்துள்ளனர்.
அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது ஜி-7 நாடுகளின் பொறுப்பு என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
உலக பாதுகாப்புக்கான அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த மேன்மேலும் ஒருங்கிணைந் த, கூடுதல் ஒத்துழைப்புக்கு ஜி7 தலைவர்கள், அரசுகள் மட்டு மின்றி, தனியார் துறை, பல்வேறு அமைப்புகள், சமூகம் என அனைத்து துறைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐஎஸ், அல் காய்தா மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு அக்கிரமம் செய்து வருகின்றன. இவை, சர்வதேச பாதுகாப்பு, அமைதி, மனிதாபி மான கொள்கைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என ஜி7 தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம், சமூக வலைத்தளங்களை தவறான முறையில் பயன்படுத் துவது. குறிப்பாக தீவிரவாத அமைப்பு களுக்கு ஆட்கள், நிதி திரட்டு வதற்கு எதிராக எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் விமான பயணங்களுக் கான பாதுகாப்பு கள் அதிகரிக் கப்பட வேண்டிய தேவை குறித்தும் குறிப்பிடப்பட் டுள்ளது.
தீவிரவாதம் தொடர்பாக இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகள் கொள்கை களையும் உறுதியான நடவடிக் கைகளாக மாற்றுவதற்கு ஜி-7 மாநாட்டில் உறுதியேற்கப்பட்டுள் ளது.