

தென்சீனக் கடல் பிரச்சினைக்கு அமைதி வழியில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மைக்காலமாக தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு சீன அரசு செயற்கை தீவுகளை உருவாக்கி விமானப்படைத் தளங்களை அமைத்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று பேசியதாவது:
தென்சீனக் கடல் பிரச்சினைக்கு அமைதி வழியில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. இந்தப் பிராந்தியத்தில் சிறிய நாடுகளை பெரிய நாடுகள் அச்சுறுத்துக் கூடாது. தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க விமா னங்கள் தொடர்ந்து பறக்கும். கப்பல்களும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடும். ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் உரிமைகளை அமெரிக்கா பாதுகாக்கும்.இவ் வாறு அவர் தெரிவித்தார்.