Last Updated : 28 May, 2016 11:50 AM

 

Published : 28 May 2016 11:50 AM
Last Updated : 28 May 2016 11:50 AM

உலகின் வயதான யானை மரணம்

உலகின் மிக வயதான யானை, ஜப்பானில் நேற்று முன்தினம் தனது 69-வது வயதில் மரணம் அடைந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வின் புறநகர் பகுதியில் உள்ள இனோகஷிரா உயிரியல் பூங்காவில் இந்தப் பெண் யானை பாதுகாக்கப்பட்டு வந்தது. ஹனகோ (பூப்போன்ற குழந்தை) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த யானை வியாழக்கிழமை இறந்ததது 1949-ம் ஆண்டு 2 வயது குட்டி யாக இருக்கும்போது தாய்லாந்து அரசால் ஜப்பானுக்கு ஹனகோ பரிசாக வழங்கப்பட்டது. உலகில் தனிமையில் வசிக்கும் ஒரே யானை இதுதான் எனவும், பசுமை குறைந்த இடத்தில் கைதியை போல் தனது வாழ்நாளை ஹனகோ கழிப்ப தாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் ஒருசமயம் குற்றம் சாட்டினர். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

கடந்த ஆண்டு ஹனகோவை கான்கிரீட் சிறையில் விடுவிக்க வேண்டும், அதை தாய்லாந்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஆன்லைன் பிரச்சாரம் நடந்தது. இதற்கு சுமார் 10 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஹனகோவுக்கு மிகவும் வயதாகி விட்டதால் நீண்ட பயணத்துக்கு அதன் உடல் ஒத்துழைக்காது என்று பூங்கா நிர்வாகம் மறுத்து விட்டது.

தாய்லாந்து தூதரகம் விடுத் துள்ள செய்தியில், “நல்லெண்ண தூதராக தாய்லாந்தில் இருந்து ஜப்பான் சென்ற ஹனகோவின் மரணம் இரு நாட்டு மக்களை கவலை அடையச் செய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x