

வங்கதேசத்தில் டாக்கா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ‘நார்வெஸ்டர்’ புயலுடன் கூடிய மழை பெய்ததில், மின்னல் பாய்ந்து பெண்கள், குழந் தைகள் உட்பட 42 பேர் பலியாகினர்.
அதிகபட்சமாக வடமேற்கு பாப்னா வில் 8 பேரும், சிரஜ்கஞ்ச் மற்றும் ராஜ்ஷாகி மாவட்டங்களில் தலா 5 பேரும் மின்னல் பாய்ந்து இறந்தனர். கிஷோர்கஞ்ச் மற்றும் பிரம்மன்பாரியா மாவட்டங்களல் தலா 4 பேர் மின்னலுக்கு பலியாகினர்.
டாக்காவில் மழையில் நனைந்த படி கால்பந்து விளையாடிக் கொண்டி ருந்த 2 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் 7 பேர் பலியான தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான வெயிலுக்குப் பின் திடீரென பெய்த மழையால் திறந்தவெளி மைதானங்களில் விளையாடிய சிறுவர்கள் மற்றும் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களே இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கியுள்ளனர்.
வங்கதேசம் மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் வீசும். சில சமயம் மழையும் பெய்யும். இதை ‘நார்வெஸ்டர்’ அல்லது ‘கால பைசாகி’ என்றழைப்பர். ‘இந்த காலகட்டத்தில் வங்கதேசத்தில் மட்டும், ஆண்டுதோறும் சராசரி யாக 300 பேர் மின்னல் பாய்ந்து இறப்பார்கள். ஆனால், அது பெரும் பாலும் செய்தியாக வெளிவராது என, வங்கதேச வானிலை ஆய்வு மைய அதிகாரி சுஜித்குமார் கூறினார்.