Published : 25 Jun 2014 08:00 AM
Last Updated : 25 Jun 2014 08:00 AM

ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தது முக்கிய மைல்கல்- அமெரிக்கா கருத்து

சிரியாவில் குவித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன ஆயுதங்களை சர்வ தேச கண்காணிப்பாளர்களிடம் அந்த நாட்டு அரசு ஒப்படைத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாது காப்புத் துறை செயலாளர் சக் ஹகல், வாஷிங்டனில் நிருபர்களி டம் கூறியதாவது:

உள்நாட்டுப் போரினால் பாதிக் கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து கேப் ரே என்ற கப்பலில் ரசாயன ஆயுதங்கள் ஏற்றப்பட்டு ஆழ்கட லில் கொட்டி அழிக்க கொண்டு செல்லப்படுகிறது. இனிமேல் அந்த ரசாயன ஆயுதங்களால் சிரிய மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

இந்தப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்ட ஐ.நா.வின் ரசாயன ஆயுதங்கள் அழிப்புத் திட்ட அலுவலர்களின் பணி பாராட்டுக் குரியது. எந்தவொரு சூழ்நிலையி லும் ரசாயன ஆயுதங்களைப் பயன் படுத்துவதை சர்வதேச சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்காது.

சர்வதேச கண்காணிப்பாளர் களிடம் ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிரியாவில் அதிபர் அல் பஷார் அஸாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எல். கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வரு கிறது.

கடந்த 2013 ஆகஸ்டில் தலை நகர் டமாஸ்கஸ் அருகே நடத்தப் பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 1400 அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியா அரசு வசம் இருந்த ரசாயன ஆயுதங்களை 2014 ஜனவரி 30-ம் தேதிக்குள் அழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை கெடு விதித்தது.

இதை ஏற்றுக் கொண்ட சிரியா அரசு, ரசாயன ஆயுதங்களை ஐ.நா. தலைமையிலான சர்வதேச கண் காணிப்பாளர்களிடம் ஒப்படைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x