பிரேசில் அதிபர் பதவிநீக்கம்: இடைக்கால அதிபரானார் மைக்கேல்

பிரேசில் அதிபர் பதவிநீக்கம்: இடைக்கால அதிபரானார் மைக்கேல்
Updated on
1 min read

பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் நேற்று தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து துணை அதிபர் மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பிரேசில் வரவு செலவு கணக் கில் தில்மா ரூசெப் போலியான புள்ளிவிவரங்களை பதிவு செய்து நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்று நாட கமாடியதாக புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்ற செனட் சபையில் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர் மானத்தின் மீது சுமார் 22 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் முடிவில் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 81 உறுப் பினர்கள் கொண்ட சபையில் 55 பேர் அதிபர் தில்மா ரூசெப்புக்கு எதிராக வாக்களித்தனர். 22 பேர் மட்டுமே ஆதரித்தனர்.

இதையடுத்து அதிபர் தில்மா ரூசெப் நேற்று தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போதைய துணை அதிபர் மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

தில்மா மீது சுமார் 6 மாதங்கள் தொடர்ந்து விசாரணை நடைபெ றும். அதுவரை மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பொறுப்பு வகிப்பார். இந்த விசாரணையில் வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்து அதிபர் பதவியில் தில்மா தொ டரலாமா, வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.

கடந்த 2011-ல் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக தில்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2015-ல் நடந்த அதிபர் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in