

இலங்கையில் புத்தமத பழமைவா திகளால் 4 முஸ்லிம்கள் கொல்லப் பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை குறைந்த நேர தொழுகை மேற்கொண்டனர்.
இதுகுறித்து இலங்கை முஸ்லிம் கவுன்சில் (எம்.சி.எஸ்.எல்) கூறுகையில், “வெள்ளிக் கிழமை குறுகிய நேர தொழுகை நடத்தவேண்டும், தொழுகைக்குப் பிறகு அமைதியாக கலைந்து செல்லவேண்டும்” என இஸ்லாமிய அறிஞர்கள் அறிவுறுத்தினர்” என்றது.
எம்.சி.எஸ்.எல். தலைவர் என்.எம். அமீன் கூறுகையில், “குறுகிய கால தொழுகைகளை உறுதிப்படுத்துமாறு அனைத்து மசூதிகளையும் உலேமாக்கள் கேட்டுக்கொண்டனர். சில இடங் களில் வழக்கமான நேரத்தை விட முன்னதாகவே தொழுகை தொடங்கியது” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “எந்த இடத்திலும் வன்முறை நிகழ்ந்ததாக தகவல் இல்லை. என்றாலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வன்முறை ஏற்படலாம் எனக் கருதி தலை நகர் கொழும்பு மற்றும் பிற நகரங் களில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியி ருந்தனர்” என்றார்.