பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்த அப்பாஸ் ஆஸ்திரேலியாவில் உள்ளார்

பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்த அப்பாஸ் ஆஸ்திரேலியாவில் உள்ளார்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்தஅவரது குழந்தை பருவ நண்பர்அப்பாஸ், தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந் துள்ளது.

தனது தாயின் நூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, வலைப்பதிவுஒன்றில் தனது குழந்தை பருவ நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்தார். அதில் குஜராத்தின் வத்நகரில் மண்ணால் கட்டப்பட்டசிறிய ஓட்டு வீட்டில் மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்ததாக தெரிவித்திருந்தார். அந்த சூழ்நிலையிலும், அருகில் உள்ள கிராமத்தில்வசித்த தனது தந்தையின் நண்பர்அகால மரணம் அடைந்தபோது, அவரது மகன் அப்பாஸ் என்பவரைதனது வீட்டுக்கு அழைத்து வந்துபடிக்க வைத்தார் என குறிப்பிட்டி ருந்தார். அப்பாஸை தனது தாய், மற்ற பிள்ளைகளைபோல் மிகுந்த அக்கறையுடன் வளர்த்தார் எனவும், அவருக்கு ஈத் பண்டிகையின் போது, பிடித்த உணவுகளை செய்து கொடுப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அப்போதிருந்தே யார் அந்த அப்பாஸ் என்பதை அறிய இணையவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். இணையத்தில் தேடி கண்டுபிடிக்கப்பட்ட அப்பாஸின் போட்டோவை, பிரதமர் மோடியின்சகாதரர் அடையாளம் காட்டினார்.அப்பாஸ் பாய் என அழைக்கப்பட்டஅவர் தற்போது ஆஸ்திரேலி யாவில் உள்ளதாகவும், பிரதமர் மோடியின் சகோதாரர் கூறினார்.

குஜராத் அரசின் உணவு மற்றும்பொது விநியோக துறையில் இரண்டாம் நிலை ஊழியராக பணியாற்றிய அப்பாஸ் சில மாதங்களுக்கு முன்புதான் ஓய்வுபெற்றுள்ளார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் வசிக்கிறார். இளைய மகன் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசிக்கிறார். அவருடன் அப்பாஸ் தற்போது வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in