Published : 19 Jun 2022 03:52 PM
Last Updated : 19 Jun 2022 03:52 PM
அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஃபைஸர், மாடர்னா கரோனா தடுப்பூசிகளை ஐந்து வயது, அதற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செலுத்த ( 6 மாத குழந்தைக்கு செலுத்தலாம்) அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை ஒப்புதல்வழங்கியுள்ளது.
அமெரிக்கா நோய் தடுப்புத் துறை தலைவர் ரோசெல் வாலென்ஸ்கி கூறும்போது, “லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆர்வமாக உள்ளது எங்களுக்கு தெரியும். அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம். ”என்றார்.
அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலை அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் பலரும் வரவேற்றுள்ளனர். கரோனா வைரஸை தடுப்பதில் இது ஆக்கப்பூர்வமான முடிவு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் 2019 ஆம் அண்டு கண்டறியப்பட்ட கரோனா தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. கரோனவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை செலுத்திக் கொண்ட பிறகுதான் கரோனா தீவிரத்தன்மையிலிருந்து பலரும் தங்களை தற்காத்து கொண்டனர்.
தற்போது கரோனாவின் பரவல் உலக அளவில் இருந்தாலும், உயிரை கொல்லும் தீவிரம் குறைந்துள்ளது. கரோனாவினால் பலியாகும் எண்ணிக்கையும் உலகளவில் குறைந்துள்ளது. சளி, காய்ச்சல், இருமல் என்ற அளவில்தான் தற்போது கரோனாவின் தாக்கம் உள்ளது எனினும் முகக்கவசம், தனி மனித தூய்மை போன்றவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT