Last Updated : 12 May, 2016 10:08 AM

 

Published : 12 May 2016 10:08 AM
Last Updated : 12 May 2016 10:08 AM

புதிய அரசியலமைப்பு சட்டத்தில் மனித உரிமை மீறலை தடுக்க நடவடிக்கை: இலங்கை அரசுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மனித உரிமை மீறலைத் தடுக்க புதிய சட்டத்தில் வழி வகை செய்ய வேண்டும் என்று ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் களான மோனிகா பின்டோ (நீதிப திகள், வழக்கறிஞர்களின் சுதந்திரம்), ஜுவான் இ மெண்டிஸ் (மனித உரிமை மீறல்) ஆகிய இருவரும் கூறும்போது, “இலங்கை அரசு புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முயற்சி, சுதந் திரத்தை வலுப்படுத்தவும், பாரபட்சமின்றி நீதித் துறை செயல் படுவதை உறுதி செய்யவும், மனித உரிமை மீறல், சித்திரவதை உள்ளிட்டவற்றிலிருந்து மனிதர்க ளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது” என்றனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த 2 நிபுணர்க ளும் கடந்த வாரம் இலங்கைக்கு சென்றிருந்தனர். தங்களது பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு அவர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக அமைந்த அரசு அரசியலமைப்புகவுன்சிலை மீண்டும் கொண்டுவந்தது உள்ளிட்ட சில சீர்திருத்தங்களை செய்தது. ஆனால் இலங்கையில் ஜனநாயகம் நீடித்திருக்க வேண் டுமானால் மேலும் சில சீர்தி ருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம்.

குறிப்பாக, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறையில் உள்ளவர்களை சந்தித் துப் பேசியதில் சித்திரவதை என்பது பரவலாக இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய் யப்பட்ட ஒவ்வொருவருக்கும் வழக்கறிஞரை நியமித்து தங்களுடைய தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற சித்திர வதை, மனித உரிமை மீறலைத் தடுக்க புதிய அரசியலமைப்பு சட்டத்தில் சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என்றனர்.

இலங்கையில் அதிபர் மைத்ரி பால சிறிசேனா அரசு பொறுப் பேற்ற பிறகு, அதிபரின் அதிகாரங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக, அரசியல் நிர்ணய சபை அமைக் கப்பட் டுள்ளது. இதற்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமை வகிக் கிறார். இப்போது உள்ள இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் (1948) கவர்னர் ஜெனரலாக இருந்த சோல்பரி வடிவமைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x