

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு நடப்பாண்டுக்கான பென் பின்டர் விருது அறிவிக்கப்பட்டுள் ளது. அவரின் இலக்கியப் பங்க ளிப்பு, கருத்துச் சுதந்திரத் துக்கு ஆதரவாக குரல்கொடுக் கும் இயல்பு ஆகியவற் றுக்காக இவ்விருது அறிவிக்கப்பட் டுள்ளது.
நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹரோல்டு பின்டரின் பெயரில், ரைட்டர்ஸ் சாரிட்டி இங்கிலிஷ் பென் அமைப்பு சார்பில் 2009-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுக்குழுவின் தலைவர் மரீன் பிரீலி கூறுகையில், “சல்மான் ருஷ்டியின் படைப்புக ளுக்காக மட்டுமின்றி, கருத்து சுதந்திரத்துக்காக அவரின் ஆதரவு மற்றும் அவரின் தனிப் பட்ட இரக்க குணத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்விருது அளிக்கப்படுகிறது.
யாரேனும் எழுத்தாளருக்கு எதிராக அநீதி இழைக்கப் பட்டாலோ, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ, நாடு கடத்தப் பட்டாலோ ருஷ்டி அவ்விவ காரத்தில் தனிப்பட்ட ஈடுபாடு காட்டுவார். தீவிரமான எழுத்தாளர் ஒருபோதும் உறங்குவதில்லை என்ற ஹரோல்டு பின்டரின் கூற்றுக்கு ருஷ்டி முதல் உதாரணம்” எனத் தெரிவித்தார்.