Published : 03 May 2016 09:49 AM
Last Updated : 03 May 2016 09:49 AM

அமெரிக்காவை சீனா ‘பலாத்காரம்’ செய்துவிட்டது: குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் குற்றச்சாட்டு

சீனா தனது தவறான வர்த்தக கொள்கை மூலம் அமெரிக்காவை ‘பலாத்காரம்’ செய்துவிட்டது என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் இண்டியா னாவில் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வீசி அவர் பேசியதாவது: அமெரிக்காவில் தொழில்கள் நலிவடைந்ததற்கு சீனாவின் நியாயமற்ற கொள் கையே காரணம். இதன் மூலம் அமெரிக்காவை அந்நாடு ‘பலாத் காரம்’ செய்துவிட்டது. மேற் கொண்டு பலாத்காரம் செய்வதற்கு சீனாவை இனியும் நாம் அனுமதிக்க கூடாது. சீனாவை விட நம்மிடம் அதிக ஆற்றல் இருக் கிறது. அமெரிக்க அதிபராக பதவி யேற்றால், சீனாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்து, இங்கு தொழில்கள் வளரவும், தொழிலாளர்கள் மேம்படவும் நடவடிக்கை எடுப்பேன். சீனா வுக்கு எதிராக நான்கு உறுதி மொழிகளை எடுத்துள்ளேன். சீனா வின் சட்டவிரோத ஏற்றுமதி மானியங்கள் மற்றும் தொழிலாளர் தளர்வு கொள்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்’’ என்றார்.

சீனாவுக்கு எதிராக ‘பலாத்காரம்’ என்ற வார்த்தையை டிரம்ப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். எனினும் அவர் மீது வாக்காளர்கள் கடும் எரிச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப் பாக அமெரிக்காவில் புழங்கும் சட்டவிரோத போதை பொருள் களுக்கு மெக்ஸிகோ நாட்டினர் தான் காரணம் என்றும் அவர்களை பாலியல் வன்முறையாளர்கள் என்றும் டிரம்ப் சித்தரித்து பேசிய தற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்புக்கு எதிராக பேரணிகளும் நடந்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் சிகாகோ மற்றும் செயின்ட் லூயிஸ் பகுதி களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டிரம்பின் பிரச்சாரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அந்நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா மவுனம்

சீனாவை டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்ததற்கு எதிராக இதுவரை அந்நாடு எந்த பதிலடியும் அளிக்கவில்லை. எனினும் டிரம்பை ஒரு எதிரியாகவே சீனா பார்ப்பதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x