

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
எல்நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக தெற்கு சீனாவில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பிஜுயன் மாகாணம் டெய்னிங் பகுதியில் உள்ள புனல் மின் நிலைய கட்டுமானப் பணியிடத்தில் நேற்றுமுன்தினம் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 31 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோரை காண வில்லை. அவர்கள் மண்ணில் புதையுண்டு இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 2 பேர் மட்டும் உயிருடன் மீட்கப் பட்டனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 10 மீட்டர் உயரத்துக்கு மண் குவிந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.