

1918-ல் தெற்கு ஸ்லாவ் இன மக்களின் கூட்ட மைப்பாக உருவானது யுகோஸ்லாவிய ராஜாங்கம். முதலாம் உலகப் போருக்குப் பிறகு உருவான இந்தக் கூட்டமைப்பினால் இரண்டாம் உலகப் போர் வரைகூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.
1943-ல் மீண்டும் ஒரு பெரு முயற்சி காரணமாக சோஷலிஸ யுகோஸ்லாவிய குடியரசுகளின் கூட்டமைப்பு உருவானது. இது கொஞ்சம் நிலையாக இருந்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் டிட்டோ எனும் உறுதிமிக்க தலைவர்.
யுகோஸ்லாவிய ராணுவத்தில் தீவிரப் பங்காற்றினார் டிட்டோ. நாஜிகளுக்கு எதிரான இயக்கத்தில் தன்னை வெகுவாக ஈடுபடுத்திக் கொண்டார்.
க்ரோவெஷியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் டிட்டோ. எந்த அரசியல் சாயமும் இல்லாமல்தான் இவர் பள்ளிப் பருவம் கழிந்தது. பின்னர் மெக்கானிக்காக பணிபு ரிந்தார். முதலாம் உலகப் போரின் போது ஆஸ்திரியா-ஹங்கேரிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் போரில் காயம் ஏற்பட்டு ரஷ்யர்களின் பிடியில் அகப்பட்டார். பின்னர் செம்படையில் சேர்ந்தார். (ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் பெரிதாக வளர்ந்த கம்யூனிஸ்ட் அணி இது).
1920-ல் மீண்டும் க்ரோவெஷியா விற்குத் திரும்பினார். யுகோஸ் லாவிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ செயல் பாடுகள் காரணமாக கைது செய்யப் பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் கழிக்க நேர்ந்தது. என்றாலும் இந்த செயல்பாடும் சிறைவாசமுமே கூட அவருக்குப் பெரும் புகழை அளித்தது.
தன் கட்சியை சீரமைத்தார். கட்டுப்பாடுகள் நிறைந்த கட்சி யாக அதை உருமாற்றினார். இரண்டாம் உலகப்போரின்போது தன் கட்சியை பெரும் பலம் மிக்கதாக அறிமுகப்படுத்தினார். ஜெர்மனி யுகோஸ்லாவியாவை 1941-ல் (இரண்டாம் உலகப்போர்) ஆக்கிரமித்தபோது அதை எதிர்த்தார். அதே சமயம் கம்யூ னிஸத்தைவிட தேச ஒற்றுமைக் குத்தான் டிட்டோ முன்னுரிமை கொடுக்கிறார் என்று அவரது கட்சியி லேயே சலசலப்பு உண்டானது.
ஆகஸ்ட் 1945-ல் யுகோஸ்லா வியா குடியரசு உருவானபோது அதன் பிரதமர் ஆனார். 1953 வரை அதன் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் விளங்கினார். ராணுவத் தளபதி மிஹஜ்லோவிக் என்பவருக்கு 1946-ல் இவர் தூக்கு தண்டனை விதித்தபோது அது பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. பலப்பல வருடங் களாகவே தனிப்பட்ட முறையி லும் டிட்டோவை இவர் விமர்சித்தது தான் இதற்கு உண்மையான காரணம் என்று கூறப்பட்டது. சோவியத் யூனியன் போலவே யுகோஸ்லாவியாவும் விளங்க வேண்டும் என்று விரும்பினார் டிட்டோ. இதற்காக கிட்டத்தட்ட சர்வாதிகாரியாகவே செயல்பட் டார். ஆட்சிக் குழு இவரை ‘வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதி’ என்று அறிவித்தது.
ஆனால் 1953-ல் சோவியத் யூனியனுடன் இவர் மாறுபடத் தொடங்கினார். முக்கியமாக ஸ்டாலினின் திட்டங்களை இவர் ஏற்கவில்லை.
ஸ்டாலின் இறந்த பிறகு கூட்டு சேரா நாடுகளை இணைப்பதற்கு டிட்டோ முயன்றார். அரபு நாடு களோடு இணக்கமாக இருந்தார். இஸ்ரேலை எதிர்த்தார். ஹங் கேரியை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோதும் அதை விமர் சித்தார். ஐ.நா.வின் முக்கிய உறுப்பினராக யுகோஸ்லாவியா விளங்கியது. உலக சமாதானத் துக்கு பலவிதங்களில் பங்களிப் பைச் செய்தது.
டிட்டோவின் மனைவி ஒரு ரஷ்யப் பெண்மணி. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தன்னைவிட அதிக வயது இளைய வரான செர்பியப் பெண்மணி யையும் மணந்து கொண்டார். டிட்டோவின் பல வெளிநாட்டுப் பயணங்களில இந்தப் பெண் மணியும் கலந்து கொண்டார். 1980 மே 5 அன்று தான் இறக்கும்வரை யுகோஸ்லாவியாவின் தலைமைப் பதவியை டிட்டோ இழக்கவில்லை.
டிட்டோவின் ஆட்சியின்போது பிற குடியரசுகள் ஓரளவு திருப்தியுடன் இருந்தாலும், க்ரோவேஷியாவும், செர்பியாவும் அதிருப்தியோடுதான் இருந்தன. இவை இரண்டும் ஒன்றை ஒன்று கடும் போட்டியாளராகவே பார்த்தன. கூட்டமைப்பு அரசியலில் செர்புகளின் பங்கு அதிகம் இருந் ததாக க்ரோவேஷியா கருதியது. பல தொழிற்சாலைகள் க்ரோ வேஷியாவில் தொடங்கப்பட்டதாக செர்பியா பொறாமைப்பட்டது.
ஒரு க்ரோவேஷிய தந்தைக்கும், ஸ்லோவேனிய அன்னைக்கும் பிறந்த டிட்டோ யுகோஸ்லாவியக் கூட்டமைப்பில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.
(உலகம் உருளும்)