

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் தம்பி பசில் ராஜபக்ச கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கை அதிபராக மஹிந்த ராஜபக்ச இருந்தபோது பசில் ரா ஜபக்ச பொருளாதாரதுறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2015 ஜன வரியில் நடந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந் த பிறகு பசில் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.
அவர் 2015 ஏப்ரலில் கொழும்பு திரும்பியபோது அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாத்தறை நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கில் கொழும்பு போலீஸ் குற்ற புலனாய்வு துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க பசில் நேற்று நேரில் ஆஜ ரானார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது கைதின் பின்னணி குறித்து கொழும்பு வட்டாரங்கள் கூறியதாவது:
நிலப்பிரச்சினை என்றால் இது வரை நூற்றுக்கணக்கான அரசியல் வாதிகள் கைது செய்யப்பட்டி ருக் க வேண்டும். பசில் ராஜபக்ச நிலப்பிரச்சினையில் கைது செய் யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினாலும் பின்னணியில் வேறு முக்கிய காரணங்கள் உள்ளன.
இலங்கை அரசை கவிழ்க்க பசில் தொடர்ந்து முயற்சி மேற் கொண்டு வந்தார். அதன்கார ணமாகவே அவர் கைது செய்யப் பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவும் விரைவில் கைது செய்யப்படலாம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
ஜாமீனில் விடுதலை
கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ச, மாத்தறை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் யரேஷா சி திவ்வா முன்பு ஆஜர்படுத் தப்பட்டார். அப்போது கடும் நிபந் தனைகளுடன் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பசிலின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் அவர் வெளிநாடு செல்ல தடை விதித்தார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நிதிமோசடி குற்றப் புலனாய்வு போலீஸ் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
பசில் மனைவியிடம் விசாரணை
இதனிடையே இலங்கை விமா னப்படைக்கு சொந்தமான விமா னங்களை முறைகேடாக பயன்ப டுத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா, மகள் தேஜானி ஆகியோருக்கு அதிபர் ஆணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி நேற்று அவர் ஆணை யத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்திருக்க வேண்டும். ஆனால் இரு வரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை இருவரும் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள் ளது.