Last Updated : 28 May, 2016 11:58 AM

 

Published : 28 May 2016 11:58 AM
Last Updated : 28 May 2016 11:58 AM

செம்மை காணுமா செர்பியா?- 10

கடந்த 1980-ல் ஸ்லோவேனி யாவில் உள்ள மருத்துவ மனையில் டிட்டோ அனுமதிக் கப்பட்டார். அவர் கால்களில் ரத்த ஓட்டப் பிரச்சினை. இதன் காரணமாக சில விரல்களில் ரத்த ஓட்டம் நின்றுபோய் கருப்பாகி விட்டன. அவரது இடது கால் நீக்கப்பட்டது. அதற்குச் சில மாதங் களுக்குப் பிறகு 1980 மே 4-ம் தேதி அவர் இறந்தார். மேலும் மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் அது அவரது 88-வது பிறந்த தினமாக இருந்திருக்கும்.

யுகோஸ்லாவியாவில் அதிபருக் காக அதிகாரபூர்வமான ஒரு ரயில் உண்டு. அதில் டிட்டோவின் உடல் தலைநகர் பெல்கிரேடுக்கு எடுத்து வரப்பட்டது.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தேசிய கால்பந்துப் போட்டி ஒளிபரப் பாகிக் கொண்டிருந்தது. அன்றைய போட்டியின் 41-வது நிமிடத்தில் மூன்று பேர் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை நிறுத் துமா று நடுவரிடம் சைகை செய்தனர். அனைவரும் திகைக்க அந்த அறிவிப்பை ஒருவர் செய்தார். ‘‘அன்புக்குரிய அதிபர் டிட்டோ இறந்துவிட்டார்’’.

பலரும் அழுதனர். சில விளையாட்டு வீரர்கள் தரையில் பொத்தென விழுந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த 50,000 கால்பந்து வீரர்களும் விம்மியபடி கலைந்து சென்றனர்.

டிட்டோவின் இறுதி ஊர்வலம் அவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது. இது உலக சரித்திரத்திலேயே மிக அதிக அளவில் பிற நாடுகளின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் என்கிறார்கள். ஐ.நா.வில் உறுப் பினர்களாக இருந்த 154 நாடுக ளில், 128 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். நான்கு மன்னர்கள், 31 அதிபர்கள், 22 பிர தமர்கள் ஆகியோரும் இதில் அடக்கம். மார்கரெட் தாட்சர், சதாம் உசேன், யாசர் அராபத், ப்ரெஷ் னேவ் போன்ற பெருந்தலைவர் கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் கலந்து கொண்டார். (எனினும் அப்போ தைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும், கியூபாவின் அப்போதைய அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் கலந்து கொள் ளாதது பலரால் விமர்சிக்கப் பட்டது).

இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அதற்குப் பிறகு வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டது 2005-ல் நடைபெற்ற போப் இரண்டாம் ஜான் பாலின் இறுதி ஊர்வலத்தில்தானாம்.

முதுமை அடைந்து விட்டிருந்த டிட்டோ தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நீண்ட காலகட்டத்திலேயே அவருடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்க வேண்டுமென்று திட்டமிட்டனராம் அரசு அதிகாரிகள்!

1980-ல் டிட்டோ இறந்த பிறகு யுகோஸ்லாவியா கூட்ட மைப்பின் கட்டமைப்பு கொஞ்சம் ஆட்டம் கண்டது. அந்த நாட்டின் பொருளாதாரம் சரியத் தொடங்கியது. யுகோஸ் லாவியாவின் ஒவ்வொரு குடியரசும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்பட்டது. பின்னர் ஒவ்வொன்றும் பிரியக் குரல் கொடுத்தது. இதன் விளைவாக ரத்த ஆறுகள் ஓடத் தொடங்கின.

பல வருடங்கள் ஆட்சியில் இருந்த டிட்டோ தனது முதிய வயதில் இறந்திருந்தார். எனவே அவரோடு தொடக்கத்தில் சுதந் திரப் போராட்டங்களில் ஈடுபட்ட யாருமே அவர் இறக்கும்போது அந்த நாட்டின் அரசியலில் குறிப் பிடத்தக்க அளவு செல்வாக் கானவராக இல்லை. இளைஞர் களைப் பொறுத்தவரை ‘அத்தனை குடியரசு மக்களும் சகோதரர்க ளாக இருப்போம்’ என்பதைவிட தங்கள் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே நினைத்தனர். டிட்டோ மீது கொண்ட மரியாதை காரணமாக அமைதி யாக இருந்ததுபோல் இருந்தது அவர்களின் நடவடிக்கை. டிட்டோ இரும்புக்கரம் கொண்டு புரட்சியா ளர்களை அடக்கி விடுவார் என்ற பயமும் காரணமாக இருந்திருக் கலாம்.

டிட்டோ இறந்தவுடன் அவர் ஆட்சியைப் பற்றிய விமர்சனங் களும் மெல்ல மெல்ல கட்டவிழ்த்து விடப்பட்டன. புதிய தலைவர்கள் மெல்ல மெல்ல உருவாகி தங்களை வெளிகாட்டிக் கொண் டனர்.

யுகோஸ்லாவியா கூட்டமைப் பில் செர்பியாவும், க்ரோவேஷி யாவும் தங்களை எதிரிகளாகவே கருதிக் கொண்டன. ஆட்சி அதிகாரத்தில் செர்புகள் அதிக அளவில் இருப்பதாக க்ரோ வேஷியா குமுறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மெல்ல மெல்ல செர்பியாவிலிருந்த முக்கிய தொழிற்சாலைகள் க்ரோ வேஷியாவுக்கும் ஸ்லோவேனி யாவுக்கும் மாற்றப்பட்டதாக செர்பியா ஆதங்கப்பட்டது.

ஏற்கனவே கூறியதுபோல தன் பிறப்பாலேயே கூட்டமைப்பின் பிரதிநிதியாக விளங்கினார் டிட்டோ. (க்ரோவேஷிய தந்தைக் கும் ஸ்லோவேனிய தாய்க்கும் பிறந்தவர்). டிட்டோ இறந்தவுடன், 35 வருடங்கள் அந்த நாட்டை கட்டிக் காத்து நாஜிக்களை உள்ளே அனுமதிக்காமல் பாது காத்த அவர் பாதையில் தொடர்ந்து செல்ல எந்தத் தலைவரும் உருவாகவில்லை.

தனக்கு ஒரு வாரிசை டிட்டோ ஏன் உருவாக்கவில்லை? தனது மறைவுக்குப் பிறகு யுகோஸ்லா வியா இப்படி ஆளப்பட வேண்டுமென்று ஒரு திட்டத்தை டிட்டோ வடிவமைத்திருந்தார். யுகோஸ்லாவியாவின் ஒவ்வொரு குடியரசைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுழற்சி முறையில் யுகோஸ் லாவியாவை ஆள வேண்டும் என்றார். அனைத்து குடியரசு களுக்கும் சம வாய்ப்பு என்று கூறிக் கொண்டார். (ஆனால் தனது மறைவுக்குப் பிறகு ‘தனக்குப் பிறகு எந்த பெரிய தலைவரும் யுகோஸ்லாவியாவில் உருவாகி விடக் கூடாது என்ற டிட்டோவின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது’ என்று கூறுகிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள்).

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x