

2009ஆம் ஆண்டு தாலிபான்களால் கடத்தப்பட்ட அமெரிக்க வீரர் பாவே பெர்க்தால் தன்னை அவர்கள் சித்ரவதை செய்ததாகக் கூறியுள்ளார்.
தாலிபான் தீவிரவாதிகள் 5 பேரை அமெரிக்கா விடுதலை செய்ததையடுத்து பெர்க்தாலை சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் அண்மையில் இவரை விடுதலை செய்துள்ளனர்.
பெர்க்தாலை நன்றாக நடத்தியதாக தாலிபான்கள் கூறிவந்தனர். ஆனால் தற்போது ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பெர்க்தால் தன்னை தாலிபான்கள் சித்ரவதை செய்ததாகக் கூறியுள்ளார்.
ஒரு முறை இவர் தப்பிக்க நினைத்தபோது அகப்பட்டுக்கொண்டார், அதன் பிறகு இவருக்கு தினசரி அடி உதை விழுந்ததோடு, கூண்டில் மிருகம் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் மனரீதியாக மிகவும் சோர்வடைந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்று கூறுகிறது.