இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச

இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச
Updated on
1 min read

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பசில் ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரையில் இலங்கையின் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் நிதியமைச்சர் பதவியிலியிருந்து அவர் ராஜினாமா செய்தார்.

தற்போது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in