Published : 24 Jun 2014 10:38 AM
Last Updated : 24 Jun 2014 10:38 AM

இராக், சிரியாவை ஒன்றிணைத்து புதிய நாடு: சன்னி முஸ்லிம் படை வியூகம்

இராக்கையும் சிரியாவையும் ஒன்றிணைத்து புதிய நாட்டை உருவாக்க இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் அமைப்பு (ஐ.எஸ்.ஐ.எல்.) வியூகம் வகுத்துள்ளது. இராக்கில் ஆளும் ஷியா பிரிவினரை எதிர்த்து ஐ.எஸ். ஐ.எல். கிளர்ச்சிப் படை போரிட்டு வருகிறது. இதே படைதான் சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் அல் பஷார் அஸாத்துக்கு எதிராகவும் போரிட்டு வருகிறது.

சன்னி முஸ்லிம்கள் தலைமை யில் இராக்கையும் சிரியாவையும் ஒன்றிணைத்து புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே ஐ.எஸ்.ஐ.எல். படையின் பிரதான நோக்கமாக உள்ளது. இந்த இரு நாடுகளையும் இணைக்கும் மூன்று எல்லைப் பகுதிகள் உள்ளன. இதில் அன்பார் என்ற பகுதியை ஐ.எஸ்.ஐ.எல். படை அண்மையில் கைப்பற் றியது. மற்றொரு எல்லைப் பகுதி அரசுப் படை கட்டுப்பாட்டிலும் 3-வது எல்லைப் பகுதி குர்து படையினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

ஒரு எல்லைப் பகுதி ஐ.எஸ். ஐ.எல். கட்டுப்பாட்டுக்குள் வந்தி ருப்பதால் சிரியாவில் இருந்து ஆயுதங்களை கடத்திக் கொண்டு வருவது அந்தப் படைக்கு எளிதாகி உள்ளது. மற்ற எல்லைப் பகுதிகளையும் தங்கள் வசமாக்க அப்படையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் ராவா, அனா ஆகிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எல். கைப்பற்றியது. மேற்குப் பகுதியில் அவர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எல். படையின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் வளைகுடா நாடுகள் முழுவதிலும் பெரும் குழப்பம் ஏற்படும். இராக், சிரியா போன்று இதர நாடுகளிலும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x