

ஆப்கானிஸ்தானில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது இரண்டு பேருந்துகள் மோதியதில், 73 பேர் பலியாயினர்.
காந்தஹார் மற்றும் காபூல் நகரங்களை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில், ஒன்றன் பின் ஒன்றாக சென்ற இரண்டு பேருந்துகள் எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியதில், மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
பேருந்துகளில் பயணம் செய்த 125 பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 73 பேர் பலியானதாகவும், 52 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கிழக்கு காஸ்னி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஜாவேத் சாலங்கி தெரிவித்தார்.
மோசமான சாலை, போக்குவரத்து விதிகள் அமலில் இல்லாதது, வாகனங்களின் கட்டுப்பாடற்ற வேகம் போன்ற காரணங்களால் காந்தஹார் - காபூல் நெடுஞ்சாலையில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.