சீனாவின் செயற்கை தீவு அருகே அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து: தென்சீனக் கடலில் பதற்றம் அதிகரிப்பு

சீனாவின் செயற்கை தீவு அருகே அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து: தென்சீனக் கடலில் பதற்றம் அதிகரிப்பு
Updated on
1 min read

தென்சீனக் கடலில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவு அருகில் அமெரிக்க போர்க்கப்பல் நேற்று ரோந்து சுற்றி வந்தது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்கு ஏராளமான செயற்கை தீவுகளை அமைத்து விமானப்படைத் தளங் களையும் உருவாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தால் சீனாவுக் கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான், புருணே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சீனாவுக்கு எதிராக களமிறங் கியுள்ள அமெரிக்க கடற்படை அண்மைக்காலமாக தென்சீனக் கடலில் போர்க்கப்பல்களை குவித்து வருகிறது.

தென்சீனக் கடலின் பியரி கிராஸ் ரீப் பகுதியில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சீன அரசு செயற்கை தீவை உருவாக்கி உள்ளது. அங்கு விமானங்கள் தரையிறங்க ஓடு பாதையையும் அமைத்துள்ளது.

இந்நிலையில் சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். வில்லியம் பி லாரன்ஸ் போர்க் கப்பல் நேற்று செயற்கை தீவு அருகே ரோந்து சுற்றி வந்தது.

கடந்த 7 மாதங்களில் மூன்றா வது முறையாக சீனா சொந்தம் கொண்டாடும் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் அத்துமீறி நுழைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் வியட்நாம் செல்கிறார். இதை முன்னிட்டு அமெரிக்க போர்க் கப்பல் சீன தீவு அருகே ரோந்து சுற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிழக்கு ஆசியாவுக் கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் டேனியல் ரஸ்ஸல் கூறியதாவது:

தென்சீனக் கடலின் சர்வதேச எல்லையில் அமெரிக்க போர்க் கப்பல்கள் சென்றாலே பதற்றம் ஏற்படுகிறது. அப்படியென்றால் சிறிய நாடுகளின் கப்பல்கள் அந்தப் பகுதியை எப்படி கடந்து செல்ல முடி யும் என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த மாதம் தென்சீனக் கடலில் சீனா அமைத்துள்ள செயற்கை தீவுகளின் மேலாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்து படம் பிடித்தன. இதற்கு சீனத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in