

சீனாவில் காவல் நிலையம் ஒன்றினுள் வாகனத்தை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 13 பேரை சீன போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
சீனாவின் கிழக்கில் ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள காவல் நிலைய கட்டிடத்தின் மீது இன்று தீவிரவாதிகள் வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்தினர். அவர்களை எதிர்த்து சீன போலீஸார் நடத்திய தாக்குதலில் 13 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
மேலும், காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் 3 பேர் காயமடைந்தனர்.
சீனாவில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்களும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதே ஜிங்ஜியாங் மாகாணத்தில், மார்க்கெட் பகுதியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் பொது மக்கள் 43 பேர் கொல்லப்பட்டனர்.