

பிரேசில் நாட்டின் போதை பொருள் கடத்தல் கும்பல்கள் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றன. இந்நிலையில் போதை கடத்தல் தொடர்பான வழக்கு அந்த நாட்டின் செர்ஜிபி மாகாணம், லகோர்டா நகர நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசார ணைக்கு வந்தது.
வழக்கு தொடர் பான வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றங்களை அளிக்க நீதிமன்றம் உத்தர விட்டது. அந்த நிறுவனம் அளித்த விளக்கத்தில், நாங்கள் உட்பட வேறு யாராலும் தகவல்களை பார்க்கவோ, படிக்கவோ முடி யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், பிரேசில் முழுவதும் வாட்ஸ் அப் சேவைக்கு 72 மணி நேரம் தடை விதித்தனர்.