மாலத்தீவுகள் முன்னாள் அதிபர் நஷீத் பிரிட்டனில் தஞ்சம்

மாலத்தீவுகள் முன்னாள் அதிபர் நஷீத் பிரிட்டனில் தஞ்சம்
Updated on
1 min read

மாலத்தீவுகள் முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு (49) அந்நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அவருக்கு பிரிட்டன் அரசு அரசியல் தஞ்சம் வழங்கி உள்ளது. இதனால் மாலத்தீவுகள் அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

இதுகுறித்து நஷீதின் வழக் கறிஞர் ஹசன் லத்தீப் கூறும்போது, “மாலத்தீவுகள் ஜனநாயகக் கட்சியின் (எம்டிபி) தலைவரான நஷீத் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரிட்டன் அரசு அவருக்கு அரசியல் அகதி என்ற அந்தஸ்தை வழங்கி உள்ளது” என்றார்.

பிரபல மனித உரிமை பிரச்சார கரும் மாலத்தீவுகளில் முதன் முறையாக ஜனநாயக முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்ட வருமான நஷீத் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.

எனினும், இந்தியா, இலங்கை மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, முதுகெலும்பு அறுவை சிகிச்சைக் காக நஷீத் பிரிட்டன் செல்ல மாலத்தீவுகள் அரசு கடந்த ஜனவரி யில் அனுமதி அளித்தது. சிகிச்சை முடிந்த பிறகு நாடு திரும்புவதாக அவர் உறுதி அளித்திருந்தார். இந் நிலையில், பிரிட்டனில் தங்கியி ருக்கும் இவருக்கு அந்நாட்டு அரசு தஞ்சம் வழங்கி உள்ளது.

கடந்த 2008-ல் முதன்முறையாக ஜனநாயக முறையில் மாலத்தீவு களின் அதிபரானார் நஷீத். இதன் மூலம் மவுமூன் அப்துல் கயூம் தலைமையிலான சுமார் 30 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. தனது ஆட்சியின்போது, ஒரு நீதிபதியை கைது செய்ய நஷீத் உத்தரவிட்டார். இதையடுத்து நஷீ துக்கு எதிராக போராட்டம் வெடித்த தால் அவர் பதவி விலகினார். இது தொடர்பான வழக்கில்தான் அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in