

அமெரிக்காவில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்து விழுந்த 1,25,000 டாலர் (சுமார் ரூ. 75 லட்சம்) பணத்தை திரும்ப ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி, 5,000 டாலர்கள் (சுமார் ரூ.3 லட்சம்) பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ‘சால்வேஷன் ஆர்மி' எனும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜோ கார்னெல் (52). அந்தப் பகுதி வழியாகச் சென்ற ‘ப்ரிங்க்ஸ்' பாதுகாப்பு நிறுவனத்தின் வாகனத்திலிருந்து 1,25,000 டாலர் பணப் பை கீழே விழுந்துள்ளது.
அதை எடுத்து, அதில் பணம் இருப்பதை அறிந்த கார்னெல், பணப் பையை காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார். கார்னெலின் நேர்மையைப் பாராட்டி, ப்ரிங்க்ஸ் நிறுவனம் அவருக்கு 5 ஆயிரம் டாலர்களும், அவர் பணியாற்றும் தொண்டு நிறுவனத்துக்கு 5 ஆயிரம் டாலர்களும் பரிசு வழங்கியுள்ளது.