WEF உலக சுற்றுலா வளர்ச்சிப் பட்டியல்: தெற்காசியாவில் இந்தியா முதலிடம்

WEF உலக சுற்றுலா வளர்ச்சிப் பட்டியல்: தெற்காசியாவில் இந்தியா முதலிடம்
Updated on
1 min read

புது டெல்லி: உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள உலக நாடுகளுக்கு இடையிலான பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிப் பட்டியலில் இந்தியா 54-வது இடம் பிடித்துள்ளது. அதேவேளையில், தெற்காசிய நாடுகளில் இந்தியா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி சார்ந்த ஆய்வு உலக அளவில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இப்போது 2022-க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா துறை உலக அளவில் கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டதாகவும், இருந்தாலும் இந்தத் துறை பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகள் உலக அளவிலான இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பயண எண்ணிக்கையில் மாற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 வாக்கில் வெளியான இதே பட்டியலில் இந்தியா 46-வது இடத்தில் இருந்தது. இந்த முறை 8 இடங்கள் பின்தங்கியுள்ளது. இருந்தாலும், தெற்காசிய அளவில் முதலிடத்தில் உள்ளது ஆறுதலாக அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in