Last Updated : 29 May, 2016 11:51 AM

 

Published : 29 May 2016 11:51 AM
Last Updated : 29 May 2016 11:51 AM

விண்வெளியில் உள்ளவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் பேசுகிறார் ஜுகர்பெர்க்

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களுடன், ஃபேஸ்புக் லைவ் வசதி மூலம் வரும் ஜுன் முதல் தேதி பேசவுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் ஜுகர்பெர்க்.

சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) உள்ள நாசா விஞ்ஞானிகள் டிம் கோப்ரா, ஜெப் வில்லியம்ஸ், ஐரோப்பிய விண்வெளி வீரர் டிம் பீக் ஆகியோருடன் 20 நிமிடங்கள் லைவ் வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்ளவுள்ளார் ஜுகர்பெர்க்.

அப்போது, நாசாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பொதுமக்கள் பதிவு செய்துள்ள கேள்விகளில் சிலவற்றை விண்வெளி வீரர்களிடம் ஜுகர்பெர்க் கேட்பார். இதனை சில பார்வையாளர்கள் நேரடியாக ஒளிபரப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் முதல் தேதி அமெரிக்க நேரப்படி மதியம் 12.55 மணிக்கு இந்த உரையாடல் நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x