

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையும் முன்பாக மாயமான இந்திய வீரர்கள் இருவரின் உடல்களை மீட்கும் முயற்சியை மீட்புக்குழுவினர் கைவிட்டனர்.
இந்திய மலையேற்ற வீரர்க ளான சுபாஷ் பால், பாரேஷ் நாத், கவுதம் கோஷ் மற்றும் ஒரு வீராங்கணை ஆகிய 4 பேர் கொண்ட குழு, எவரெஸ்ட் சிகரத்தை தொடும் முயற்சியில் ஈடுபட்டது.
கடந்த 21-ம் தேதி தங்களின் இலக்கான 8,848 மீட்டர் உயரத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயத் தில், பாரேஷ்நாத் மற்றும் கவுதம் கோஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் தொடர்பு துண்டிக்கப் பட்டது. மாயமான இருவரையும் தேடும் முயற்சியில் மீட்புக்குழு வினர் ஈடுபட்டனர்.
எவரெஸ்ட் சிகரத்துக்கும், அதற்கு முந்தைய முகாமான சவுத் கோலுக்கு இடைப்பட்ட பகு தியில், சுமார் 8,000 மீட்டர் உய ரத்தில் இருவரின் உடல்கள் தென் பட்டன. ஆனால், ‘மோசமான வானிலை காரணமாக, இருவரின் உடல்களை மீட்கும் நடவடிக்கை களை மீட்புக் குழுவினர் கைவிட் டுவிட்டனர்.
‘அடுத்த பருவத்தின் போது, உடல்களை கைப்பற்ற முடியும் என நம்புகிறோம்’ என, நேபாள மலையேற்ற முகாமைச் சேர்ந்த வாங்சூ செர்பா தெரிவித்தார். இவ்விருவ ருடன் மலையேறிய சுபால்பா லும், கடந்த ஞாயிறன்று, உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மற்றொரு வீராங்கனை மீட்கப்பட் டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடப்பு மலையேற்றப் பரு வத்தில், பலியானவர்களின் எண் ணிக்கை சுபாஷ்பாலுடன் சேர்த்து, 3ஆக உயர்ந்துள்ள து. ஏற்கெ னவே ஆஸ்திரேலிய, டச்சு வீரர்கள் இருவர் பலியாகினர். மாயமான 2 இந்திய வீரர்களையும் சேர்த்தால், எண்ணிக்கை 5 ஆகும்.