

அமெரிக்காவில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தங்களது 18-வது பிறந்தநாளைக் கொண்டாடினர். அமெரிக்காவின் ஹூஸ்டனில் 18 ஆண்டுகளுக்கு முன்பு எமிலி மற்றும் கெய்ட்லின் என்ற இரட்டைக்குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன.
பெண்குழந்தைகளான இருவரும் 10 மாதத்துக்குப் பின் ஹெர்மன் குழந்தைகள் நல மையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர். ஹூஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் அவர்கள் தங்களின் 18-வது பிறந்தநாளை கொண்டாடினர். இரண்டு லட்சம் பிரசவத்திற்கு ஒரு முறை என்ற வீதத்தில் இரட்டையர்கள் ஒட்டிப் பிறக்கின்றனர்.