80 ஆயிரம் பேர் முன்னிலையில் 13 வயது சிறுவன் நிகழ்த்திய பழிக்குப் பழி கொலை: ஆப்கனில் கொடூரம்

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

காபூல்: ஆப்கானிஸ்தானில் 80 ஆயிரம் பேர் திரண்டிருந்த ஒரு மைதானத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த நபரை சுட்டுக் கொன்ற சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணாத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆப்கன் உச்ச நீதிமன்றம் அண்மையில் இந்த தண்டனையை நிறைவேற்ற அனுமதியளித்திருந்தது. அதனையடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நபர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 13 பேரை 10 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.

இந்நிலையில் பழிக்குப் பழி கொலையை 13 வயது சிறுவனை வைத்து நிறைவேற்றியது சர்வதேச அரங்கில் கண்டனத்தை ஈர்த்துள்ளது. ஐ.நா சபையின் ஆப்கனுக்கான சிறப்பு கண்காணிப்பாளர், ரிச்சர்ட் பென்னட், இந்தச் சம்பவம் மனிதநேயமற்ற, கொடூரம் என்று கண்டித்துள்ளார். சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான வீடியோக் காட்சியில் விளையாட்டு மைதானத்தில் பாதிக்கப்பட்டவரின் உறவினர் உள்பட 80 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். அப்போது குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் மைதானத்தின் மையத்தில் அமர வைக்கப்பட்டு அவர் மீது ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவர் மண்ணில் சரிந்து விழுந்ததும், குழுமியிருந்த மக்கள் மத கோஷங்களை எழுப்பினர். 

தண்டனை நிறைவேற்றத்துக்கு முன்னர், துப்பாக்கியுடன் காத்திருந்த சிறுவனிடம் மன்னிப்பு வழங்க விரும்புகிறாயா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்தச் சிறுவன் இல்லை என்று சொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சிறுவன் தன் கையிலிருந்த துப்பாக்கியால் 5-வது குண்டை சுட்டு தண்டனையை நிறைவேற்றினான்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
பிரதமர் மோடி குறித்து காங். பிரமுகர் வெளியிட்ட ஏஐ வீடியோவால் சர்ச்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in