Published : 12 May 2022 08:10 AM
Last Updated : 12 May 2022 08:10 AM
மும்பை: ‘‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என மும்பையில் உள்ள இலங்கை பாடகி யோகானி கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், இலங்கைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகி யோகானி கடந்த மாதம் வெளியிட்டார். இதற்கு நிதியுதவி அளிக்கும்படி, தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இவரது ‘மனிகே மஹே ஹித்தே’ என்ற சிங்கள பாடல் மிகவும் பிரபலம். தற்போது மும்பையில், இந்திய இசை கலைஞர்களுடன் பணியாற்றும் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனதுடைந்து போயுள்ளேன். நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம். எனது நாட்டு மக்களுக்கு உதவ, எனது குரலை பயன்படுத்துவேன். நான் எனது நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன். நான் மும்பையில் இருந்தாலும், எனது குடும்பம், நண்பர்கள், என்னுடைய இசைக்குழுவினர் எல்லாம் இலங்கையில்தான் உள்ளனர். எனது தாய் நாட்டின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’
இவ்வாறு யோகானி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT