

இராக்கில் உள்ள அமெரிக்கர்கள், அங்குள்ள அந்நாட்டு தூதரகம் மற்றும் அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க, அமெரிக்க ராணுவத்தினர் 275 பேர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இராக்கின் வடக்கு பிராந்தியத்தின் முக்கிய நகரான தல் அபாரை சன்னி முஸ்லிம்களின் கிளர்ச்சி அமைப்பான ஐ.எஸ்.ஐ.எல் படை கைப்பற்றியது. இந்த நிலையில் ஈராக்கின் பல நகரங்களில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், இராக்கில் உள்ள அமெரிக்கர்கள், அவரது சொத்துக்களை பாதுகாக்க, சுமார் 275 அமெரிக்க ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பென்டகன் செய்தி செயலர் ஜான் கிர்பி கூறுகையில், "பாக்தாதில் அமெரிக்கப் படையினர் பெரிய அளவில் பாதுகாப்பு பணிக்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு குழுமம் இதுகுறித்த தகவல்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறது" என்றார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இதனை உறுதி செய்திருந்தார். "ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவே ராணுவத்தினர் ஆயத்தப்படுத்தப்பட்டனர். பாதுக்காப்பு நோக்கத்துடன் இருக்கும் அவர்கள் தேவை ஏற்பட்டால் போர் நடத்தவும் தயார் நிலையில் உள்ளனர். இராக்கில் நிலைமை சீரடையும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு இருக்கும்" என்று ஒபாமா கூறியிருந்தார்.