ஆப்கன் பயணிகள் பேருந்து குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு

ஆப்கன் பயணிகள் பேருந்து குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கனில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர் மற்றும் பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். 3 பேர் பலியாகினர். இந்த நிலையில் பஸ்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் அமர்ந்தது முதல் நாட்டில் குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் மசார்-இ-ஷரிப் மசூதியில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பயங்கர குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

ஆப்கனில் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in