Published : 01 May 2022 07:55 AM
Last Updated : 01 May 2022 07:55 AM

அது பைத்தியக்கார தருணம் - நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த இங்கிலாந்து எம்பி ராஜினாமா

லண்டன்: இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர், நாடாளுமன்றத்தில் இருமுறை தனது செல்போனில் ஆபாசப்படங்கள் பார்த்ததை ஒப்புக்கொண்டு தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்துள்ளர்.

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்பி நீல் பாரிஷ், அந்நாட்டு இவர் ஹவுஸ் ஆப் காமன்ஸில் ஆபாசப்படம் பார்த்த குற்றச்சாட்டு காரணமாக வெள்ளிக்கிழமை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், பிபிசிக்கு அளித்த பேட்டியில் நீல் பாரிஷ் கூறுகையில், நான் எனது குடும்பத்திற்கும், என்னுடைய தொகுதிக்கும் இதனால் ஏற்பட்டுள்ள கலங்கம் எனக்கு புரிகிறது. அதனை நான் தொடர்ந்து நடத்துவது மதிப்பிற்குரியது இல்லை.

முதல் முறையாக நான் அதனைப் பார்க்கும் போது அது தற்செயலாக நடந்தது. டிராக்டர் ஒன்றைத் இணையத்தில் தேடும் போது எதிர்பாராத விதமாக சிறிது நேரம் நான் தடுமாறி ஆபாச அதனைப் பார்த்தேன். நான் செய்த மிகப் பெரிய தவறு மற்றொரு சந்தர்ப்பத்தில் இரண்டாவது முறையாக அதனைப் பார்த்தது தான். இந்த முறை தெரிந்தே அதைச் செய்தேன்.

நான் செய்ததை நான் மறைக்கப் போவதில்லை. நான் செய்தது முற்றிலும் தவறானது. நான் எனது உணர்வுகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அது ஒரு பைத்தியக்காரத் தருணம்" என்று அவர் தெரிவித்தார்.

ஹவுஸ் ஆப் காமன்ஸில் ஆண் எம்பி ஒருவர் ஆபாசப்படம் பார்த்ததாகவும் அதே நபர் ஒரு குழு விசாரணையின் போதும் அத போல் ஆபாச படம் பார்த்ததாக பெண் எம்பி ஒருவர் கூறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x