Published : 01 May 2022 12:18 AM
Last Updated : 01 May 2022 12:18 AM

வானத்திலிருந்து தரையிறங்கும் தேவதை: இணையத்தில் வைரலாகும் வெள்ளை மயில் வீடியோ

சிலை ஒன்றின் மீது இருந்து புல் தரையை நோக்கி வெள்ளை மயில் ஒன்று பறந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. இதில் வெள்ளை நிற மயில் என்றால் இன்னும் சிறப்பு. அப்படி பட்ட வெள்ளை நிற மயில் ஒன்று சிலையின் உச்சியில் இருந்து பறந்து வந்து தரையிரங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Yoda4ever என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், பூங்காவில் உள்ள சிலை ஒன்றின் உச்சியிலிருந்து வெள்ளை மயில் ஒன்று பறந்து வந்து தரையிறங்குவது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ, இத்தாலியின் ,ஸ்ட்ரெசாவிற்கு அருகில் உள்ள மாகியோர் ஏரியில் உள்ள போரோமியன் தீவுகளில் ஒன்றான, ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். இந்த தோட்டத்தில், வண்ண, வெள்ளை மயில்கள் சுதந்திரமாக வாழ்கின்றன.

இந்த வீடியோ ட்விட்டரில் 21,000க்கும் அதிகமான லைக்குகளையும், 2.5 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

பயனர் ஒருவர் "அழகு! ஐசோலா பெல்லா சரியாக அந்த இடத்தில் வெள்ளை மயில் ஒன்று என்னைக் கொத்தியது. மிகவும் அழகானது அர்த்தமுள்ளதும் கூட எனத் தெரிவித்துள்ளார்.

எனக்கு ஒரு பீனிக்ஸ் பறவையை நினனவூட்டுகிறது ( அது வெள்ளைநிறத்தில் உள்ளது) என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வெள்ளை மயிலை பார்த்த நியாபகம் ஆனால் அது பறந்து பார்த்தில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணுமற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாகும். பிறக்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மயில்கள் வளரும் போது வெள்ளை நிறமாக மாறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x