

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும் இந்தியா-சீனாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா உரிய மதிப்பளிக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.
கிழக்காசியாவுக்கான அமெ ரிக்க ராணுவ துணை உதவி செயலாளர் ஆப்ரஹாம் எம் டென் மார்க் அண்மையில் ஆண்டறிக் கையை சமர்ப்பித்தார். அதில், ‘சீனா உலகின் பல்வேறு பகுதிகளில் நிலை நிறுத்தியுள்ள தனது படைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது குறிப்பாக பாகிஸ்தா னில். இந்திய-சீன எல்லைகளில் சீனா படைபலத்தை அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் உள்ள நோக்கத்தைக் கணிப்பது மிகச்சிரமம்’ எனக் கூறியிருந்தார்.
இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
“இப்பிரச்சினையைக் கையா ளும் அளவுக்கு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போதுமான அறிவு உள்ளது. பிரச்சினைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காணும் இந்தியா மற்றும் சீனாவின் முயற்சிகளுக்கு மற்ற நாடுகள் உரிய மரியாதை அளிக்கும் என நம்புகிறோம்” என சீன வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
தென் சீனக் கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக அப்பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி அதனை ராணுவ மயமாக்குவதில் சீனா கவனம் செலுத்தி வருவதாக பென்டகன் ஆய்வறிக்கையில் கூறப் பட்டிருப்பதற்கு, சீன பாதுகாப்பு அமைச்சகம் மிகுந்த அதிருப்தி யைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய-சீன எல்லையில் ராணுவ பலத்தை அதிகரிப்பது தொடர்பான கருத்துக்கு, “சீனாவின் ராணுவ மேம்பாட்டை அந்த அறிக்கை தவறாக சித்தரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.