Last Updated : 20 May, 2016 05:13 PM

 

Published : 20 May 2016 05:13 PM
Last Updated : 20 May 2016 05:13 PM

சிரியாவில் ‘இந்திய ஜிஹாதிகள்’- ஐஎஸ் வெளியிட்ட வீடியோவில் தகவல்

சிரியாவில் அந்நாட்டு படைகளை ஐஎஸ். அமைப்புக்காக ‘இந்திய ஜிஹாதிகள்’ எதிர்த்துப் போராடுவது போன்ற வீடியோ ஒன்றை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் ‘இந்தியா’விலிருந்து வந்துள்ளதாக கூறப்படும் ஜிஹாதிகள் கலாஷ்னிகவ் (ஏகே.47) ரக துப்பாக்கிகளுடன் சண்டையிடுவதான காட்சி இடம்பெற்றுள்ளது.

அதாவது தங்களிடம் உள்ள அயல்நாட்டு தீவிரவாதிகள் பற்றி உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவும் மேலும் பலர் இஸ்லாமிக் ஸ்டேட் படையில் இணைய விளம்பர யுக்தியாகவும் இந்த வீடியோவை ஐஎஸ். வெளியிட்டுள்ளதாக அமெரிக்காவில் உள்ள தனியார் உளவு நிறுவனமான ‘சைட்’ தெரிவித்துள்ளது.

ஐஎஸ். தீவிரவாத அமைப்பின் ஹோம்ஸ் பிரிவு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதில் பேட்டி காணப்பட்ட ‘இந்திய ஜிஹாதிகள்’, இந்தியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி ஜிஹாத்தில் இணைந்து துரோகிகளை பழிதீர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று இந்த வீடியோவை மேற்கோள் காட்டி அல்-மஸ்தர் நியூஸ் என்ற ஊடகம் வெள்ளியன்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் சிரியாவில் ஐ.எஸ். படையில் எவ்வளவு இந்தியர்கள் இருக்கின்றனர் என்ற சரியான புள்ளி விவரங்கள் இல்லை.

ஆனால் சமீபத்தில் பால்மைராவில் சிரியா ராணுவப்படைக்கு எதிராக போரிட்டு மாண்டவர்களில் இந்திய ஜிஹாதிகள் இருந்ததாக சிரிய அரபு ராணுவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோவில் இந்திய ஜிஹாதிகள் சிரிய படைகளுக்கு ‘ஜிஹாத்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

ஆனால், ஏற்கெனவே 2015-ம் ஆண்டு ஐஎஸ் தெரிவித்ததாக வெளிவந்த செய்திகளில், இந்தியர்கள் உட்பட தெற்காசிய முஸ்லிம்கள் சண்டைக்கு லாயக்கற்றவர்கள் என்றும், அராபிய வீர்ர்களை ஒப்பிடும் போது இவர்கள் வலுவற்றவர்கள் என்றும் கூறியிருந்தது. ஆனால் தெற்காசிய முஸ்லிம்களை நைச்சியமாக தற்கொலைத் தாக்குதலுக்கு ஐஎஸ் அனுப்புவதாக செய்திகள் எழுந்தன.

அதாவது அராபிய தீவிரவாதிகள் ஐஎஸ். படிமுறை ராணுவ அமைப்பில் அதிகார மட்டத்திலும் இவர்களுக்கு நல்ல ஆயுதங்களும், நல்ல சம்பளங்களும், நல்ல இருப்பிடமும் வழங்கப்படுவதாக அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது.

மாறாக தெற்காசியப் பகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தீவிரவாதிகள் சிறிய அறையில் கூட்டமாக தங்கவைக்கப்படுகின்றனர் என்றும் அராபிய வீரர்களை விட குறைந்த சம்பளமும், குறைந்த திறன் ஆயுதமும் வழங்கப்படுவதாக உளவுத்துறை செய்திகள் இருக்கின்றன.

இவர்களை நயவஞ்சகமாக தற்கொலைத் தாக்குதலுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது. அதாவது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொடுத்து தாக்க வேண்டிய இலக்கு வந்தவுடன் ஒரு தொலைபேசி அழைப்பு அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். அதாவது தொடர்பு கொண்ட அந்த நபர் என்ன செய்ய வேண்டும் என்று தாக்குதல்காரர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள் என்று கூறப்படும், ஆனால் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவுடனேயே வாகனத்தின் குண்டுகள் வெடித்துச் சிதறி விடும். இந்த நயவஞ்சக முறையை அராபியர்களை விட தாழ்ந்தவர்களாக ஐஎஸ் கருதும் இந்திய தீவிரவாதிகள் உட்பட தெற்காசிய தீவிரவாதிகள் இடத்தில் ஐஎஸ் கையாண்டு வருவதாகவும் உளவுத்துறை செய்திகள் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x