பிரிட்டிஷ் இளவரசிக்கு பிறந்தநாள்: புதிய புகைப்படங்கள் வெளியீடு

பிரிட்டிஷ் இளவரசிக்கு பிறந்தநாள்: புதிய புகைப்படங்கள் வெளியீடு
Updated on
1 min read

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதியரின் இளைய மகள் இளவரசி சார் லோட்டியின் முதலாவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி குட்டி இளவரசியின் புகைப் படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக பிரிட்டிஷ் அரசு குடும்பத்தினரை புகழ்பெற்ற புகைப்பட நிபுணர்கள் படம் எடுப்பது வழக்கம். அதனை வில்லியம், கேத் தம்பதியர் மாற்றியுள்ளனர். தனது மகள் சார்லோட்டியை வெவ்வேறு கோணங்களில் கேத் மிடில்டன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள்தான் இப்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.

அண்மையில் வில்லியம், கேத் தம்பதியின் மூத்த மகன் ஜார்ஜ், தங்கை சார்லோட்டியை மடியில் வைத்து முத்தமிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தையும் கேத் மிடில்டனே கிளிக் செய்துள்ளார்.

இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட்டியின் பாதுகாப்பில் அரசு குடும்பத்தினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களை பொது இடங்களில் பார்ப்பதோ, புகைப்படம் எடுப்பதோ மிகவும் அரிது. எனவே இப்போது வெளியாகியுள்ள சார்லோட்டியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in