

இந்தியாவில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்று சர்வதேச ஆய்வ றிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்த கோடீஸ்வரர்கள் பட்டியல் தயாரிப்பின்போது குறைந்தபட்சம் ரூ.400 கோடி சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் எண்ணிக்கை கணக்கி டப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 40,06,000 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
ஜப்பான் (23,27,000 கோடீஸ் வரர்கள்) இரண்டாம் இடத்தி லும் ஜெர்மனி (11,30,000 கோடீஸ்வரர் கள்) மூன்றாம் இடத்திலும் சீனா (7,58,000 கோடீஸ்வரர்கள்) நான்காவது இடத்திலும் உள்ளன.
உலக கோடீஸ்வரர்களில் 59.9 சதவீதம் பேர் இந்த 4 நாடுகளில் வசிக்கின்றனர்.
இந்தியா 16-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா வில் ஒரு லட்சத்துக்கு 53 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருந் தனர்.
இந்த ஆண்டு புதிதாக 3 ஆயிரம் கோடீஸ்வரர்கள் உருவாகி யுள்ளனர். இதன் மூலம் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.56 லட்சத்தை எட்டியுள்ளது.