

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எப்) நிறுவனர்களில் ஒருவரான அமானுல்லா கான் (80) பாகிஸ்தானில் நேற்று மரணம் அடைந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ் தானில் வசித்து வந்த அமானுல்லா கான், நுரையீரல் பாதிப்பு காரண மாக 3 வாரங்களுக்கு முன் ராவல் பிண்டியில் உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார்.
காஷ்மீருக்கு விடுதலை கோரும் வன்முறைப் போராட் டத்துக்கு ஜேகேஎல்எப் தலைமை வகித்தது. 1980-களின் மத்தியில் பிரிட்டனில் இந்திய தூதரக அதிகாரி கொல்லப்பட்டது, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் லாகூருக்கு கடத்திச் செல்லப்பட்டது ஆகிய வற்றுக்கு அமானுல்லா கான் மூளையாக செயல்பட்டதாக நம்பப் படுகிறது.