

லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய ஜமாத் உத் தாவா, அல் அன்ஃபால் ட்ரஸ்ட், தெஹ்ரிக் இ ஹுர்மத் இ ரசூல் மற்றும் தெஹ்ரிக் இ தஹாபுஸ் கிய்ப்லா அவ்வால் ஆகிய அமைப்புகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா தலைவர்களான நஸீர் அகமது சவுத்ரி மற்றும் முகம்மது ஹூசைன் கில் ஆகியோர் சிறப்பு சர்வதேச பயங்கரவாதிகள் (எஸ்டிஜிடி) என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிதியுதவியைத் தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்க கருவூலத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகமது, லஷ்கர் இ தொய் பாவின் நிதிசார்ந்த நடவடிக் கைகளைக் கவனித்து வருகிறார். கில், லஷ்கர் இ தொய்பா அமைப் பின் நிறுவனர்களுள் ஒருவர்.
22 பேருக்கு தடை
அமெரிக்க வெளியுறவுத்துறை யும் கருவூலத்துறையும், மேலும் 22 தனி நபர்களை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் என அறிவித்துள் ளன. “பயங்கரவாத அமைப்புக ளுக்கான நிதியாதாரத்துக்கு இடையூறு விளைவிப்பதன் மூலம், லஷ்கர் இ தொய்பாவின் தலைமையை மேலும் வலிமையுடன் எதிர்த்துப் போராட இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என பயங்கரவாதம் மற்றும் நிதிசார் புலனாய்வுத் துறைக்கான கருவூலப்பிரிவு செயலர் டேவிட் எஸ் சோஹன் தெரிவித்துள்ளார்.
லஷ்கர் இ தொய்பாவுக்கான நிதியாதாரத்தை முடக்குவதற் கான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். லஷ்கர் இ தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீத் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.