Published : 11 Apr 2022 07:07 AM
Last Updated : 11 Apr 2022 07:07 AM
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் நேற்றுஒரே நாளில் 25,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அங்கு கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,70,000-ஐ கடந்தது.
ஷாங்காய் நகரில் கரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த 2 வாரத்துக்கு முன் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஷாங்காய் நகரில் உள்ள 2.6 கோடி மக்கள், வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அதோடு, அங்கு உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் பெரும்பாலானோருக்கு, மிதமான கரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்குஅமல்படுத்தப்பட் டது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஷாங்காய் நகரில் கரோனா காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்கவில்லை என பலர் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பொருட்கள் விநியோகத்தை சீர்படுத்த கோரி பலர் தெருவுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
கரோனா பாதிக்கப்பட்டவர்கள், தனிமை மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு கழிவறைபோன்ற அடிப்படை வசதிகள்இன்னும் சரியாக அமைக்கப்பட வில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.
கரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைகள், பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைமையங்களுக்கு அனுப்பப்படு வதும் மக்களிடையே கோபத்தை அதிகரித்துள்ளது. இதனால் கரோனா பாதித்த குழந்தைகளை பெற்றோர்கள் சந்திக்க, சீனஅதிகாரிகள் தற்போது அனுமதித் துள்ளனர். ஊரடங்கு காரணமாக, ஷாங்காய் மக்்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இளைஞர்கள் உணவு பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குகின்றனர். ஆனால், முதியவர்கள் பலருக்கு ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்களை வாங்கும் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர்.
ஷாங்காய் நகரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றும்படி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரமாக அமல்படுத்தப்படும் ஒரே நாடாக சீனா உள்ளது. சீனாவில் மக்கள் பலருக்கு, 3 டோஸ் தடுப்பூசிகள் போடப் பட்டுவிட்டன. இதனால்மருத்துவமனையில் அனுமதியாவதும், உயிரிழப்பும் குறைந்துள்ளது. ஆனால் முதியவர்கள் குறைந்த அளவிலேயே கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதனால் இங்கு முதியவர்கள் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT