Published : 11 Apr 2022 05:52 AM
Last Updated : 11 Apr 2022 05:52 AM
ராமநாதபுரம்: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்தனர்.
அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்ததால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் எரிபொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு தட்டுப்பாடும்ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்குஎதிராக போராட்டங்களும் நடத்திவருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, இலங்கையில் உணவுகூட கிடைக்காமல் தவிக்கும் தமிழர்கள், தங்கள் குழந்தைகளுடன் தமிழகத்துக்கு அகதிகளாக வரத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அகதிகளாக வந்து மண்டபம் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை திரிகோணமலை உப்புவேலியில் இருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த3 ஆண்கள், 3 பெண்கள், 4 குழந்தைகள் என 10 பேர் ஒரு பைபர் படகு மூலம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர். அவர்களிடம் தனுஷ்கோடி மரைன் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், மேலும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் என 9 பேர்இலங்கையில் இருந்து படகு மூலம்தனுஷ்கோடி அரிச்சல் முனைக்குவந்தனர். அங்கிருந்து அவர்களாகவே மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்றனர்.
ஒரேநாளில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் அகதிகளாக மண்டபம் முகாமுக்கு வந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 39 பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT