Published : 29 Jun 2014 01:28 PM
Last Updated : 29 Jun 2014 01:28 PM

இராக்கில் தீவிரவாதிகளை எதிர்த்து போரில் இறங்கியது குர்து படை

இராக்கில் சன்னி தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதலை சமாளிக்க குர்திஸ்தான் தன்னாட்சி பிரதேச மும் தமது பாதுகாப்புப் படைகளை சண்டையில் இறக்கியுள்ளது. தமது பிரதேசங்களை பாதுகாப்பதற்காக பெஷ்மெர்கா என்ற பாதுகாப்புப் படையினரை அது இறக்கியுள்ளது.

இதனால், இளைஞர்கள், முதிய வர்களும் தீவிரவாதிகளை எதிர்த்து போரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சன்னி தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆயுதங்களை ஏந்தி பங்கேற்க தயாராகுமாறு ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் குர்து அதிபர் மசூத் பர்சானி.

குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள மூன்று மாகாணங்களின் தலைநகர் அர்பிலில் உள்ள பெஷ் மெர்கா முகாமில் போரில் பங்கேற் பவர்களுக்கு பயிற்சி கொடுக்கப் பட்டு வருகிறது.

பெஷ்மெர்கா பாதுகாப்புப்படை வீரர்கள் சிறந்த பயிற்சியும் ஆயுதங் களை கையாள்வதில் தேர்ச்சியும் பெற்றவர்கள். புதிதாக தேர்வான வர்கள் 45 நாள் பயிற்சி பெறு வார்கள். இதனிடையே, போரில் இடம் பெயர்ந்தவர்கள் தங்க வும் நிவாரண உதவி வழங்க வும் அமைக்கப்பட்டுள்ள முகாம் களை ஐநா அகதிகள் ஆணை யர் அலுவலகம் விரிவாக்கம் செய் துள்ளது என பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை மிக்க காரகோஷ் பகுதியிலிருந்து 10000 பேர் வெளி யேறியதாக ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. கார கோஷ் நகரம் மோசுல் நகரின் தென் கிழக்கே 30 கிமீ தொலைவில் உள்ளது. மோசுல் நகரை ஜூன் 10 ம் தேதி தீவிரவாதிகள் கைப்பற்றி னர். அப்போதிலிருந்து இந்த நகரை விட்டு 5 லட்சம் பேர் அச்சம் காரண மாக குர்திஸ்தான் தன்னாட்சி பிராந் தியத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பாக்தாத் மீது பறக்கும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்

இதனிடையே, இராக்கில் உள்ள தமது படைவீரர்களுக்கும் தூதர்க ளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை பாக் தாத் நகர் மீது பறக்க விடுகிறது அமெரிக்கா. மோசமான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் இனி பாக்தாதை தீவிரவாதிகளால் கைப்பற்ற முடியாது எனவும் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க அரசியல் நடவடிக்கை கள் அவசியம் என்பதை பிரத மர் நூரி அல் மாலிகி ஒப்புக்கொண்ட தையடுத்து நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என இராக் கின் ஷியா பிரிவு தலைமை குரு வேண்டுகோள் விடுத்தார். சன்னி தீவிரவாதிகள் கடுமையாக போரிட்டு 5 மாகாணங்களில் பெரும் பாலான நகரங்களை கைப்பற்றினர். இந்த சண்டையில் 1000க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x